முகப்புகோலிவுட்

மார்ச் 8ல் ஷுட் துவங்கும் 'கார்த்தி 17'

  | March 03, 2018 13:10 IST
Karthi Next Film

துனுக்குகள்

  • கார்த்தி கைவசம் 2 படங்கள் உள்ளது
  • இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடவுள்ளார்
  • இப்படத்தில் கெஸ்ட் ரோலில் ‘நவரச நாயகன்’ கார்த்திக் நடிக்கவுள்ளார்
வினோத்தின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி கைவசம் பாண்டிராஜின் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ரஜத் ரவிஷங்கர் படம் என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ரஜத் ரவிஷங்கர் இயக்கவிருக்கும் படம், கார்த்தியின் கேரியரில் 17-வது படமாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடவுள்ளார்.

முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், கெஸ்ட் ரோலில் ‘நவரச நாயகன்’ கார்த்திக் நடிக்கவுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை ‘ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் வெளியிடவுள்ளதாம்.
 


இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 3-ஆம் தேதி) படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷூட்டிங்கை வருகிற மார்ச் 8-ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கவுள்ளனர். இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளிலும், ஹைதராபாத், மும்பை மற்றும் இமயமலை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்