விளம்பரம்
முகப்புகோலிவுட்

ராஜஸ்தானில் படமாக்கபடும் கார்த்தியின் பிரம்மாண்ட திரைப்படம்

  | March 13, 2017 16:36 IST
Movies

துனுக்குகள்

  • கார்த்தியின் காற்று வெளியிடை படத்தின் டிரையிலர் வெளியாகியுள்ளது
  • வினோத்-கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’
  • சண்டை காட்சிகள் ராஜஸ்தானில் உள்ள பூஜ் என்ற இடத்தில் நடைப்பெற்று வருகிறது
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'காற்று வெளியிடை' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி வெளியாக தயாராக உள்ளது. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நடிகர் கார்த்தி நடிக்கும் முதல் படம் இது என்பதால் அனைத்து தரப்பினரிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரையிலர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அது ஒரு புறம் உள்ள நிலையில், நடிகர் கார்த்தி இப்போது 'சதுரங்க வேட்டை' புகழ் இயக்குநர் வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, பூஜ் பகுதியில் 20 நாட்கள் படபிடிப்புகள் நடத்தவும் படக்குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

யதார்த்தமான இயற்கை சூழல்களை கொண்டுள்ளதால் இப்பகுதியில் படபிடிப்பு நடத்த முடிவு செய்ததாக கூறிய ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், படத்தின் மிக முக்கியமான காட்சிகளையும் அங்கேயே படமாக்கி வருகிறார்.
 
karthi theeran adhigaaram ondru

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் தீரன் அதிகாரம் ஒன்று படப்பிடிப்பு

மேலும் ஆக்ஷன் காட்சிகளை பூஜ் பகுதியில் பரபரப்பாக படமாக்க எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனின் சண்டை காட்சி அமைப்பில் ஒரு “ஹை வே” ஆக்ஷன் காட்சி ஒன்றும் படமாக்க திட்டமிடப்படுள்ளது. அந்த காட்சிகள் அனைத்தும் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விஷுவல் டிரீட்டாக இருக்கும் என்று ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கூறியுள்ளார்.
இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அபிமன்யு சிங், நடிகர் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். டிரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ஏற்கனவே நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த காஷ்மோரா திரைப்படத்தையும் இவர்களே தயாரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்