விளம்பரம்
முகப்புகோலிவுட்

கார்த்தி DSP-யாக மிரட்டும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ டீஸர்

  | September 27, 2017 17:01 IST
Theeran Adhigaram Ondru Teaser

துனுக்குகள்

  • கார்த்தி கைவசம் 2 படங்கள் உள்ளது
  • இப்படத்தில் கார்த்தி போலீஸ் டி.எஸ்.பி-யாக நடித்து வருகிறார்
  • இதன் டிரையிலரை அக்டோபர் 17-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்
‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு கார்த்தி கைவசம் வினோத்தின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் பாண்டிராஜ் படம் ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில், கார்த்தி ‘தீரன் திருமாறன்’ எனும் நேர்மையான போலீஸ் டி.எஸ்.பி-யாக வலம் வரவுள்ளாராம். இந்த படத்தின் கதைக்களம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், ‘வேலாயுதம், தலைவா’ புகழ் அபிமன்யு சிங் நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து வரும் இதற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.சிவனந்தீஷ்வரன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ‘காக்கி’ என்ற பெயரில் உருவாகி வரும் இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
 

சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டுள்ளனர். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. படத்தின் டிரையிலரை அக்டோபர் 17-ஆம் தேதியும், படத்தை நவம்பர் 17-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்