முகப்புகோலிவுட்

பொங்கல் ரேசில் கதிரின் “சிகை”

  | January 06, 2019 23:22 IST
Kathir

துனுக்குகள்

  • இணையத்தில் இந்த படம் வெளிவருகிறது
  • கதிர் இப்படத்தில் புதிய வேடத்தில் நடித்திருக்கிறார்
  • ரித்விகா இந்த படத்தில் முக்கிய வேடமிட்டிருக்கிறார்
"மதயானைக்கூட்டம்"  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். அதன் பிறகு விக்ரம் வேதா, கிருமி என அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. பின் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் தனது இயல்பான நடிப்பில் ரசிகர்களை ஈர்த்தார்.
 
இவர் தற்போது ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் “சிகை” என்கிற படத்தில் நடித்திருக்கிறார். விக்னேஷ் லோகு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
 
மெட்ராஸ்,கபாலி, படங்களில் நடித்த ரித்விகா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.  இந்த படத்திற்கு  ரோன் எத்தன் யோஹான் இசையமைத்திருக்கிறார்,
 
இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளிவராமல் இணையதளங்களில் வெளியாக இருக்கிறது.
 
,

 அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஜீ5 போன்ற இணையதளங்களில்  இப்படம் வெளிவருகிறது.
 
பொங்கல் அன்று ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் திரைப்படங்கள் திரையரங்குகளில்  வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த “சிகை” படத்தின் டிரைலரை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த டிரைலரில் பாலியல் தொழிலை மய்யப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை உறுதி செய்யும் விதமான காட்சிகள் இடம் பெறுகின்றன.
 
அடுத்தடுத்த காட்சிகளும் வசனங்களும் விறுவிறுப்பாக நகர்கிறது. இதில் கதிர் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்