விளம்பரம்
முகப்புகோலிவுட்

ரசிகர்களின் மனதை கவர்ந்த 'கவண்' பட டிரையிலர்

  | March 13, 2017 16:41 IST
Movies

துனுக்குகள்

  • இம்மாதம் வெளிவரயிருக்கும் கவண் திரைப்படம்
  • முதல் முறையாக இணைந்துள்ள கே.வி.ஆனந்த் - விஜய் சேதுபதி கூட்டணி
  • சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ள டி.ராஜேந்தர்
தன்னுடைய எதார்த்த நடிப்பால் மக்கள் மனதில் தனி இடம் பிடித்து இன்று எல்லோராலும் ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இம்மாதம் வெளிவர வெளிவரயிருக்கும் திரைப்படம் ’கவண்’.

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டீன் நடித்துள்ளார். நடிகர் விஜய.டி.ராஜேந்தர் மற்றும் விக்ராந்த் மிக முக்கிய கதாப்பத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளனர்.

டிரையிலர் துவங்கும் போதே ஊடகத்தை போட்டு தாக்கும் வசனங்கள் பறக்கிறது, ஊடகத்தின் மறு முகத்தை இப்படத்தில் காட்ட போகிறார்களாம் அது என்ன என்பது இன்னும் சின நாட்களில் பார்போம்.
 

அதனை தவிர பின்னணி இசை ஹிப் ஹாப் தமிழா டிரையிலரிலேயே நன்றாக உள்ளது, ஒளிப்பதிவு அபினந்தன் ராமனுஜம், எடிட்டிங் ஆண்டனி செய்துள்ளார். இப்படத்திற்கு வசனம் சுபா மற்றும் கவிஞர் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளனர்.
ஏற்கனவே கவிஞர் கபிலன் வைரமுத்து எழுத்துகளில் உருவாகியிருந்த இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஏ.ஜி.எஸ். எண்டெர்ட்யின்மெண்ட் தயாரிக்கிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்