முகப்புகோலிவுட்

ஏ.ஆர்.ரஹ்மான், விஷாலை அடுத்து ‘கவிப்பேரரசு’ வைரமுத்து

  | January 11, 2018 10:48 IST
Vairamuthu Books

துனுக்குகள்

  • வாசித்தல் என்ற ஞானப் பயிற்சிக்கு இந்தப் புத்தகக் காட்சி ஒரு பொற்கூடமாகும்
  • வளரும் தலைமுறையே வாசிக்க வா என்று அன்போடு வரவேற்போம்
  • என் நூல்களின் மொத்த விற்பனைத் தொகையை வழங்கப்போகிறேன்
380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். சமீபத்தில், ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டது.

இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கனடாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி மூலம் ரூ.25 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி அளித்தார். நடிகர் விஷால் ரூ.10 லட்சம் கொடுத்தார். இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “நேற்று (ஜனவரி 10-ஆம் தேதி) முதல் தொடங்கியுள்ள சென்னைப் புத்தகக் காட்சியை வாழ்த்துகிறேன். வாசித்தல் என்ற ஞானப் பயிற்சிக்கு இந்தப் புத்தகக் காட்சி ஒரு பொற்கூடமாகும்.
 
படைப்பாளர் – பதிப்பாளர் – வாசகர் என்ற முக்கூட்டுப் பாசனத்தில் தமிழும் கலையும் தழைத்தோங்கும் என்று நம்புகிறேன். வளரும் தலைமுறையே வாசிக்க வா என்று அன்போடு வரவேற்போம். ஓர் அறிவுப் பரம்பரை செழுமையுறட்டும். இந்தப் புத்தகக் காட்சி மூலம் கிட்டும் என் நூல்களின் மொத்த விற்பனைத் தொகையை ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு வழங்கப்போகிறேன்” என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்