முகப்புகோலிவுட்

"சாவித்ரியுடன் அப்போ புகைப்படம் எடுக்கல. ஆனா, இப்போ எடுத்துட்டேன்" - சிங்கீதம் சீனிவாச ராவ்

  | May 14, 2018 15:08 IST
Keerthy Suresh Nadigaiyar Thilagam

துனுக்குகள்

  • தமிழ் உட்பட பல மொழிகளில் படம் இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ்
  • நடிகை சாவித்ரியின் திரைப்பயணத்தில் முக்கியமானவர் சிங்கீதம்
  • சாவித்ரியின் பயோபிக் `மகாநடி' வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது
நடிகை சாவித்ரியின் பயோபிக் ஆக உருவாகியிருக்கும் படம் `மகாநடி'. தமிழில் இது டப் செய்யப்பட்டு `நடிகையர் திலகம்' ஆக வெளியானது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இப்படம் பலத்த பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். சாவித்ரியின் திரைப்பயணத்தில் முக்கியமான பலர் பற்றியும் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் "பலரும் நீங்கள் சாவித்ரியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா, எனக் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் இல்லை. ஆனால், இப்போது எடுத்துவிட்டேன்" என எழுதி, சாவித்ரி வேடத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் சிங்கீதம் சீனிவாச ராவ்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்