முகப்புகோலிவுட்

'சண்டக்கோழி 2' டீமுக்கு கீர்த்தி சுரேஷின் ஸ்பெஷல் கிஃப்ட்

  | August 10, 2018 12:01 IST
Sandakozhi 2 Shooting

துனுக்குகள்

  • இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்
  • இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்
  • ‘நடிகையர் திலகம்’ கடைசி நாளின் போதும் கீர்த்தி கோல்டு காயின் வழங்கினார்
2005-ஆம் ஆண்டு விஷால் – இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘சண்டக்கோழி’. இதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் விஷால் – லிங்குசாமி கைகோர்த்துள்ளனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இது விஷாலின் கேரியரில் 25-வது படமாம்.

முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெகட்டிவ் ஷேடில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கிறாராம். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி நாள் ஷூட்டிங்கில் ‘சண்டக்கோழி 2’ டீமுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தங்க நாணயங்களை பரிசாகக் கொடுத்துள்ளாராம். இதேபோல், ‘நடிகையர் திலகம்’ (தெலுங்கில் ‘மகாநடி’) படக்குழுவினருக்கும் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கீர்த்தி சுரேஷ் தங்க நாணயம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்