முகப்புகோலிவுட்

கோலிவுட்டில் என்ட்ரியாகும் ‘கிரிக் பார்ட்டி’ சம்யுக்தா ஹெக்டே

  | September 12, 2018 16:59 IST
‘காக்கா முட்டை’ படத்தில் இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவர் நட்டு தேவ். தற்போது, இவர் இயக்குநராக களமிறங்கும் படம் ‘பப்பி’. இதில் ஹீரோவாக ‘போகன், நெருப்புடா’ போன்ற படங்களில் நடித்த வருண் நடிக்கவுள்ளார்.

வருணுக்கு ஜோடியாக ‘கிரிக் பார்ட்டி’ எனும் கன்னட பட புகழ் சம்யுக்தா ஹெக்டே டூயட் பாடி ஆடவுள்ளார். சம்யுக்தா ஹெக்டே தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதானாம். மேலும், இப்படத்தில் ஒரு நாய் நடிக்கிறதாம்.

வெகு விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்