முகப்புகோலிவுட்

நடிகை ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் திரையுலகினர்

  | March 12, 2018 12:24 IST
Sridevi Prayer Meet

துனுக்குகள்

  • மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி
  • நேற்று மாலை நட்சத்திர ஹோட்டலில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது
  • சினிமா பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டவர்
பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் ஸ்ரீதேவி. துபாயில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தவர் கடந்த மாதம் 24ம் தேதி இருதய துடிப்பு முடக்கம் ஏற்பட்டு இறந்தார். அவரின் மரணம் திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

பல மொழிகளிலும் ஸ்ரீதேவி நடித்துள்ளதால், முக்கிய நகரங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்த அவரது கணவர் போனி கபூர் முடிவு செய்துள்ளார். அதன் படி அவர் இறந்து 16ம் நாளான நேற்று கிரவுன் பிளாசா ஹோட்டலில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டு போனி கபூருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

அதற்கு முன்னதாக சென்னையில் சி.ஐ.டி நகரில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் 16ம் நாள் சடங்குகள் நடைபெற்றன. இதில் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினி உள்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்