முகப்புகோலிவுட்

மார்ச் 16 முதல் சினிமா பணிகள் அனைத்தும் நிறுத்தம் - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்

  | March 10, 2018 16:40 IST
Theatre Strike

துனுக்குகள்

  • க்யூப், யு.எஃப்.ஓ கட்டணங்களை எதிர்த்து புதுப்படங்கள் வெளியாகவில்லை
  • மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு
  • திரைப்படப் பணிகளை நிறுத்த தயாரிப்பாளர் சங்கமும் முடிவெடுத்துள்ளது
க்யூப், யு.எஃப்.ஓ ஆகியவற்றின் அதிகப்படியான கட்டணத்தைக் குறைக்க கோரி மார்ச் 1 முதல் எந்தப் புதுப் படங்களையும் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களாக தமிழில் எந்தப் புதுப் படமும் வெளியாகவில்லை.அதைத் தொடர்ந்து கேளிக்கை வரி ரத்து, தியேட்டர் புதுப்பித்தல், பராமரிப்பு ஆகிய கோரிக்கைகளுக்கு அரசாணை பிறப்பிக்கக் கோரி திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூடுவதாக அறிவித்துள்ளது.

தற்போது மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 16 முதல் திரைப்படப் பணிகளை நிறுத்த முடிவு செய்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். திரைப்படங்களின் படப்பிடிப்பு, புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பைத் துவங்குவது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் என சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தி வைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1. டிஜிட்டல் புரொஜக்டர் சம்பந்தப்பட்ட VPF கட்டணத்தை இனி தயாரிப்பாளர்கள் ஏற்றக மாட்டோம்.
2. திரையரங்கு கட்டணங்களை படத்திற்கு ஏற்றவாறு குறைத்து மக்களுக்கு படம் பார்க்கும் ஆர்வத்தை மிகைப்படுத்த வேண்டும்

3. மக்களின் சுமையை அதிகரிக்கும் Online Ticketக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும்

4. அனைத்து திரையரங்குகளிலும் உடனடியாக Computerized Ticket Bookingஐ நடைமுறைபடுத்த வேண்டும்

5. சிறிய படங்களின் முக்கிய பிரச்சனையான தியேட்டர் தட்டுபாடை சரிசெய்ய ரிலீஸ் ரெகுலேஷன் கொண்டு வருதல்

6. தயாரிப்பு செலவுகளை வெகுவாக கட்டுப்படுத்த அனைத்து வித ஒழுங்கு நடவடிக்கைகளை முறைப்படுத்துதல்

இதுதான் எங்கள் கோரிக்கை படத்தின் தயாரிப்பாளருக்கே அனைத்து உரிமைகளும் இருக்க வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்