விளம்பரம்
முகப்புகோலிவுட்

தீரா உலா தீரா கனா - தமிழ் சினிமாவின் நெகிழ்வான காதல் தருணங்கள்

  | February 14, 2017 11:37 IST
Valentines Day 2017

துனுக்குகள்

  • சில காதல் கை கூடும் சில கடந்து போகும்
  • பல வருடங்களாக காதலிப்போர் கதையில் எத்தனை நெகிழ்வான தருணங்கள் இருக்கும்
  • காதல் தோல்வியை அனைவரும் ஒரே விதத்தில் எடுத்துக்கொள்வதில்லை
உணர்வுகளால் சூழப்பட்டது தான் வாழ்வு, அதில் காதல் இன்றியமையாத ஒன்று.

அன்பு என்பதை தாண்டி ஒரு பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையில் இருக்கும் காதல் , காதலுக்கு முன் இருக்கும் குழப்ப மனநிலையின் அழகியல் என்பதை பதிவு செய்வது அத்தனை எளிய காரியமில்லை.

எத்தனை இயக்குனர்கள் படம் எடுத்தாலும்,
சில இயக்குனர்களுக்கே காலத்திற்கும் காதலர்கள் கொண்டும் வகையில் காட்சியமைக்க வாய்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் காதலின் பல்வேறு பரிணாமங்களை சிலேகிக்கும் ஒரு தொகுப்பு இப்பதிவு,

காதலும் கடந்து போகும்
 
kadhalum kadanthu pogum

காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் இறுதிக்காட்சி


என்னதான் பார்த்தவுடன் காதல் வருவதாக பல திரைப்படங்களில் காட்டப்பட்டலும் யதார்த்த வாழ்க்கையில் காதல் வருவது என்னவோ பெரும்பாலும் பழகும்பொழுது தான்.
நட்பு காதலாக மாற உருவெடுக்கும் காலம் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் பல நெகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும்.

அது காதலா என்றே உறுதி செய்ய முடியாத குழப்ப நிலையிலும் என்னவளுக்காக என்னவருக்காக என அவனும் அவளும் உடைக்கும் எல்லைகள் தான் காதலை உணரும் தருணம்.
காதலை கூறாமல் தன் துணைக்கு உணரவைக்கும் முயற்சிகளும் தானே விழுந்துவிட்டதை உணரும் நொடிகளும் தான் அந்த அழகியலின் உச்சம்.

காதலும் கடந்து போகும் படத்தில் இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா எனும் குழப்பம் இறுதிக்காட்சி வரை இருந்துகொண்டே இருக்கும்

சில காதல் கை கூடும் சில கடந்து போகும்
ஆனால் அந்த தருணங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பதிவாக காலம் கடந்து அசைபோடும் பொன் நினைவுகளாக நிற்கும்.

அலைந்து திரிந்து போராடி தான் விரும்பிய வாழ்க்கையை ஒரு வழியாக யாழினி அடைந்துவிடுகிறாள்.

அவள் அதை அடையசெய்தவன், கதிர்

நிற்கிறான் அவள் முன்

அவள் நோக்க அவனும் நோக்குகிறான்
ஒரு யுகத்தின் நினைவலை பெருக்கெடுக்கிறது
வசனத்தின் தேவையே நீர்த்துப்போகும் ஒரு காட்சி.
 
பண்ணையாரும் பத்மினியும்
 
pannayaarum padminiyum

இளமையில் மட்டுமல்ல, முதுமையிலும் காதல் பூக்கும்


காதல் என்பது என்றுமே இளமையை உவமையாக்கி பாடப்படுவது, ஆனால் காதலுக்கு வயதும் இருக்கிறதா என்ன

மூன்று நான்கு வருடம் காதலிக்கும் ஜோடிகளுக்கே பாட, பகிர, பரிமாற இத்தனை இருப்பின் இருபது முப்பது வருடங்களாக காதலிப்போர் கதையில் எத்தனை நெகிழ்வான தருணங்கள் இருக்கும்.

ஆனால் இந்த முதிர் காதலை காட்சிப்படுத்த பெரும்பான்மை இயக்குனர்கள் ஏனோ முயற்சிப்பதில்லை. வெகு சிலருக்கே அதற்கான முதிர்ச்சியும் தைரியமும் இருக்கிறது.

எனக்காக பொறந்தாயே எனதழகி என்று தொடங்கும் பாடலும் அதன் காட்சியமைப்பும் யதார்த்த காதலின் கரைப்படாத பிரதிபலிப்பு.
தன் ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் கிராமத்து ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே இருக்கும் ஊடலும், செல்லச்சண்டைகளும் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அபாரம்.

விண்ணை தாண்டி வருவாயா
 
vtv

தன்னுடைய வலிகளுக்கு வடிவம் கொடுக்கும் தருணம்


காதல் தோல்வியை அனைவரும் ஒரே விதத்தில் எடுத்துக்கொள்வதில்லை, சிலர் அதிலேயே கிடந்து மருகி வாடுகின்றனர், சிலர் தன்னை சுற்றி இருப்பவர்கள் மீது தாபம் கொள்கின்றனர், சிலர் தற்கொலை வரை கூட செல்கின்றனர். ஆனால் கார்த்திக் அப்படிப்பட்ட இளைஞன் அல்ல, அவன் அந்த காதலையே தனக்கான உத்வேகம் அளிக்கும் சக்தியாக மாற்றுகிறான், அந்த வலியை உணர்கிறான் ரசிக்கிறான், ஒரு போதை போல, உணர்வுகளை அவன் கலை வடிவமாக மாற்றுகிறான்.

இதில் முழுப்பாடலும் மலையாளத்தில் இருந்தும் அதன் உணர்வுகள் துளிகூட சிதையாமல் நமக்கு புரிவது தான் ரஹ்மான் இசையின் தனித்துவம்.

காதல் தோல்வி எனும் வலியை கூட தன் கலைக்கான இடு பொருளாக மாற்றி தன் காதலை காவியமாக மாற்றும் ஒரு இளைஞனின் காதல் பயணம்,
இரு மனங்களின் உணர்வுகள் ஒன்றை சேர்த்து வைத்த நினைவுகளின் அசைபோடல், கனவுகளின் கரைசல், ஆரோமலே

காதலர் தின வாழ்த்துக்கள்

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்