முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியின் 'கூட்டிப்போ கூடவே' பாடல்

  | February 14, 2018 10:55 IST
Junga Movie

துனுக்குகள்

  • விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சயிஷா நடிக்கிறார்
  • இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார்
  • காதலர் தின ஸ்பெஷலாக சிங்கிள் டிராக்கை வெளியிட்டுள்ளனர்
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி – இயக்குநர் கோகுல் கைகோர்த்துள்ள படம் ‘ஜுங்கா’. ‘IABK’ சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சயிஷா டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இசையமைத்து வரும் இதற்கு டட்லி ஒளிப்பதிவு செய்து வருகிறார், VJ.சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘A&P குருப்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.
 

இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியது. தற்போது, படத்தில் இடம்பெறும் ‘கூட்டிப்போ கூடவே’ எனும் பாடலை காதலர் தின ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர். லலிதானந்த் எழுதியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்