முகப்புகோலிவுட்

‘மாரி 2’ டீமுக்கு குட்-பை சொன்ன கிருஷ்ணா, டோவினோ

  | June 27, 2018 16:34 IST
Maari 2

துனுக்குகள்

  • இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு வில்லன் கதாபாத்திரமாம்
  • இன்னும் ஒரு ஷெடியூல் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம்
2015-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கியிருந்த இப்படம் மாஸ் ஹிட்டானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். தற்போது, மீண்டும் தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணி ‘மாரி 2’-விற்காக கைகோர்த்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி டூயட் பாடி ஆடி வருகிறார்.

கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு வில்லன் கதாபாத்திரமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கிருஷ்ணா மற்றும் டோவினோ தாமஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு ஷெடியூல் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். இதை இயக்குநர் பாலாஜி மோகனே ட்வீட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்