முகப்புகோலிவுட்

கிருஷ்ணாவுடன் குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த்

  | January 16, 2019 11:16 IST
Sakalakalavalli Song

துனுக்குகள்

  • கடந்த 2012 'கழுகு' படம் வெளியானது
  • இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்
  • யாஷிகா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம் ‘கழுகு'. இப்படத்தில் நடிகர் கிருஷ்ணா,பிந்து மாதவி இன்னும் பலர் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'கழுகு 2' என வெளியாக இருக்கிறது.

இதிலும் கிருஷ்ணா - பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.  இந்த படத்தை 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு  இசையமைத்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்களை  வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா. நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு கிருஷ்ணாவுடன்  நடனமாடியுள்ளார்.
 

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். 'சகலகலா வள்ளி'  எனும் தலைப்பில் இந்தப்பாடல் 300 நடன கலைஞர்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குநர் தீனா நடனம் அமைத்துள்ள இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்