விளம்பரம்
முகப்புகோலிவுட்

விதார்த்தின் ‘குரங்கு பொம்மை’ புதிய டிரையிலர்

  | August 12, 2017 13:44 IST
Kurangu Bommai Trailer 2

துனுக்குகள்

  • இயக்குநர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக்கை மம்மூட்டியும், டிரையிலரை முருகதாஸும் வெளியிட்டனர்
  • இதன் டிரையிலர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது
அறிமுக இயக்குநர் நித்திலன் என்பவர் இயக்கியுள்ள படம் ‘குரங்கு பொம்மை’. இதில் ஹீரோவாக விதார்த் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் டூயட் பாடி ஆடியுள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜா விதார்த்துக்கு அப்பாவாக நடித்துள்ளாராம். மேலும், பி.எல்.தேனப்பன், கஞ்சா கருப்பு, பாலா சிங், இளங்கோ குமாரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அஜநீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இதற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், அபினவ் சுந்தர் நாயக் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ஸ்ரேயாஸ்ரீ மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மம்மூட்டியும், அனிமேடட் போஸ்டரை விஜய் சேதுபதியும், டீஸரை ஆர்யாவும், டிரையிலரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் சமீபத்தில் வெளியிட்டனர். படத்தின் பாடல்களை திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் ரிலீஸ் செய்தனர்.
 

இவை அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் புதிய டிரையிலரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரையிலரும் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து டிரெண்டாகி வருகிறது. வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்