முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாகிறாரா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா….?

  | February 18, 2019 12:14 IST
Nayanthara Rajinikanth

துனுக்குகள்

  • ஏ,ஆர் முருகதாஸ் இந்த படத்தை இயக்குகிறார்
  • இந்த படத்தில் நயன்தாரா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்
விஜய்யின் சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ரஜினியிடம் படப்பிடிப்புக்கான தேதியையும் ஏ. ஆர். முருகதாஸ் பெற்றிருப்பதாக செய்திகள் வேகமாக பரவின.
 
இந்த படத்தில் ரஜினிக்கு ஏற்றவாறு முழு நீள அரசியல் படமாக ஏ.ஆர். முருகதாஸ் எடுக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.   இந்நிலையில் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
 
‘சந்திரமுகி' திரைப்படத்தில் ரஜினியும், நயன்தாராவும் சேர்ந்து நடித்திருந்தார்கள் அந்த படம் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் ரஜினியுடன் நயன்தாரா நடித்தால் நிச்சயமாக இந்த படம் நன்றாக இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
கூடிய விரைவில் படத்தில் பணியாற்றக்கூடிய, தொழில் நுட்பக்கலைஞர்கள், துணை நடிகர்கள் யார் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்