விளம்பரம்
முகப்புகோலிவுட்

காதல் தளும்பும் காற்று வெளியிடை - நெகிழும் கார்த்தி

  | February 14, 2017 17:42 IST
Celebrities

துனுக்குகள்

  • பார்க்கும் அனைவரையும் காதல் வயப்படுத்தும் அந்த காட்சி
  • நான் படத்தின் கதாபாத்திராகவே சிந்திக்க தொடங்கிவிட்டேன்
  • மாறுபட்ட கண்ணோட்டத்தை எனக்கு இப்படத்தில் கொடுத்துள்ளார் மணிரத்னம்
அழியாத காதல் காவியங்களை காட்சியின் வழியே திரையில் வடிவமைப்பதில் என்றுமே வல்லவர், இயக்குனர் மணிரத்னம். காட்சியை வடிவமைப்பதில் அவர் ஒரு மாயாவி என்றே கூறலாம். தற்பொழுது வெளியாகியுள்ள காற்று வெளியிடை படத்தின் "அழகியே" பாடலும், "வான் வருவான்" என்ற ஒரு நிமிட பாடலும், அந்த அழகிய மாயத்தை தர தவறவில்லை. ஒரு அழகிய, காதல் தளும்பும் விமானியாக பாடலில் தோன்றிய கார்த்தியிடம், காற்று வெளியிடை திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு இயக்குனர் மணிரத்னம் எவ்வாறு உயிர் கொடுத்தார் என்று கேட்டறிந்தோம்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசையில், ரவிவர்மாவின் காட்சியமைப்பில் வெளியாகியுள்ள " அழகியே" என்ற பாடல் இணையதளங்களில் இளைஞர்களின் மனதை ஆட்கொண்டுள்ளது. காதலர்  தினமான இன்று வெளியாகியுள்ள"வான் வருவான்" முழு பாடல் இளைஞர்கள் மனதில் கண்டிப்பாக ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அழகிய தேவதையை போன்ற அதிதி ராவ், தன்னுடைய கதாநாயகனான, முகத்தில் இம்மியளவும் ரோமங்கள் இல்லாத கார்த்தியுடன் பனித்துளிகளில் காதல் செய்யும் அழகை பார்க்கும் பொழுது காதலிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் பார்க்கும் அனைவரையும் காதல் வயப்படுத்தும் அந்த காட்சி.
 
karthi kaatru veliyidai mani ratnam

நடிகர் கார்த்தி, இயக்குனர் மணிரத்னம் அவர்களின் ரசிகர், அதன் பிறகு ஆயுத எழுத்து திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் உதவி இயக்குனராக  பணியாற்றினார். தற்பொழுது மணிரத்னத்தின் காதல் நாயகனாகவே மாறியுள்ளார் கார்த்தி. அவருடைய காதல் காவியங்களை ஒரு ரசிகனாய் பார்த்து வியந்த கார்த்தி, தற்பொழுது அவருடைய திரைப்படத்தின் நாயகனாக கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த சவாலான தருணங்களை பற்றி நம்மிடம் கூறும்பொழுது,

"இயக்குனர் மணிரத்னம் அவர்கள், கதாபாத்திரத்தினை காட்சிப்படுத்தும் விதம் குறிப்பாக காதலர்களுக்கு இடையிலான ஊடல்களை காட்சி படுத்தும் விதத்தினை பார்க்கும் பொழுது காதல் வசப்பட்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தாக்கத்தை அந்த காட்சி ஏற்படுத்தும். நான், காற்று வெளியிடை திரைப்படத்தில் நடித்தது மிகவும் சவாலான விஷயம். காரணம், இப்படத்தின் கதாபாத்திரம் என்னுடைய உண்மையான பழக்கவழக்கத்திற்கு நேர் எதிர் தன்மையுடையது. தொடக்கத்தில் இந்த கதாபாத்திரத்தை என்னால் எளிதாக உள்வாங்கி கொள்ள முடியவில்லை. இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பேனென்ற நம்பிகையே என்னிடம் இல்லை. 25 நாட்கள் பயிற்சிக்கு பின் தான் என்னால் அந்த கதாபாத்திரத்தை ஏற்க முடிந்தது. அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்டேன், அந்த கதாபாத்திரத்தை எனக்குள் உணர ஆரம்பித்தேன், அந்த கதாபாத்திராகவே சிந்திக்க தொடங்கிவிட்டேன்."
படப்பிடிப்பு பற்றிய சுவாரசியங்கள்
 
karthi kaatru veliyidai aditi rao hydari

நீண்ட உரையாடல், வாசிப்பு பயிற்சி, கதாபாத்திரத்திற்க்கான நடிப்பு பயற்சியென இயக்குனர் மணிரத்னத்தினுடனே பயணித்துள்ளார் கார்த்தி, அதனை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் "இயக்குனர் மணிரத்னம் எப்பொழுதுமே நடிகர்களுடன் உரையாடிய பின் தான் ஒரு காட்சியை படமாக்குவார். உரையாடலின்பொழுது, கதாபாத்திரத்தின் தன்மையை முழுவதும் விளக்குவார். உறவுகள் மீது அவரிடம் உள்ள புரிதல் மிகவும் ஆழமானது, வலிமையானது. சாதாரணமாக நாம் ஒரு காட்சியை படிக்கும் பொழுது நமக்குள் ஒரு சில காட்சிகள் ஓடும். அதே காட்சியை  மணிரத்னம் அவர்கள் விளக்கும் பொழுது, அதன் பார்வை நம் சிந்தனையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படும்!

இரு உறவுகளுக்கிடையேயான மாறுப்பட்ட சிந்தனையை கையாளுவதிலும் மணிரத்னம் வல்லவர். மணிரத்னம் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான வேறுபாடு, எந்த விஷயம் அந்த கதாபாத்திரங்களை ஈர்க்கின்றது, இறுதியில் இருவரும் எவ்வாறு இணைகின்றன என்பதை மிகவும் அழகாக கையாளுவார். ஒரு நடிகனாக, எனக்குள் பல மாற்றங்களை மணிரத்னம் கொடுத்துள்ளார். நீங்கள் பாடலிலும், டீஸரிலும் காணும் அழகான, உயிரோட்டமுள்ள, முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தை எனக்கு இப்படத்தில் கொடுத்துள்ளார் மணிரத்னம்.

ஒரு நல்ல திரைப்படத்திற்கு படக்குழுவினரின் ஒருமித்த சிந்தனை இன்றியமையாதது, ரவி வர்மன் அவர்களின் காட்சியமைப்பும், காட்சியமைப்புக்கு ஏற்ற விதத்திலான இசைக்கோர்ப்பும், பாடல் வரிகளும் படத்தினை வேறொரு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது, நடன, சண்டை இயக்குனர்களின் பணியும் இன்றியமையாத ஒன்று. பல கலைகள் ஒன்றாக சேர்ந்தால் தான் ஒரு அழகிய சித்திரம் உருவாகும். மணிரத்னம் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் இந்த விஷயங்களை தான் பின்பற்றி வருகிறார், இவைகள் தான் பார்வையாளர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அந்த காட்சியோடு ஒன்றி வாழவைக்க உதவுகின்றது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்