முகப்புகோலிவுட்

"ரியல் லைஃபிலும் நாங்க லவ்வர்ஸா?" – விளக்கமளித்த ‘96’ ஆதித்யா, கௌரி

  | October 09, 2018 12:37 IST
96

துனுக்குகள்

  • இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியிருந்தார்
  • இளம் வயது விஜய் சேதுபதியாக ஆதித்யாவும், த்ரிஷாவாக கௌரியும் நடித்திருந்தனர
  • ஆதித்யாவும், கௌரியும் உண்மையாகவே காதலர்கள் என்று கூறப்படுகிறது
கோலிவுட்டில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் ‘96’. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்த இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியிருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தனர்.

கோவிந்த் வஸந்தா இசையமைத்திருந்த இதற்கு மகேந்திரன் ஜெயராஜு - சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தனர், கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் இதனை தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ஆதித்யாவும், கௌரியும் ரியல் லைஃபிலும் காதலர்கள் தான் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது குறித்து இருவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் “நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். காதலர்கள் இல்லை. ராம் மற்றும் ஜானு எனும் கதாபாத்திரங்கள் மூலம் திரையில் மட்டுமே காதலர்களாக நடித்தோம். ஆகையால், எங்களை பற்றி தவறான செய்தியை பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்