முகப்புகோலிவுட்

"காலா ரிலீஸ் தேதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்" லைகா ட்வீட்

  | March 22, 2018 10:26 IST
Kaala Release Date

துனுக்குகள்

  • ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தது ‘லைகா’ நிறுவனம்
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் நானா படேகருக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ், ஸ்டில்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் இப்படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம். இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் காரணமாக ‘காலா’வின் ரிலீஸ் தள்ளிப்போக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. தற்போது, ‘லைகா’ நிறுவனம் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் “பரவி வரும் இச்செய்தி வதந்தியே. இதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்