முகப்புகோலிவுட்

முதன் முறையாக ஷங்கர் படத்தில் இணைந்த பாடலாசிரியர் தாமரை

  | May 28, 2018 12:41 IST
Director Shankar

துனுக்குகள்

  • 'இந்தியன்' முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார்
  • ஷங்கர் படத்திற்கு தாமரை பாடல் எழுதுவது இதுவே முதன்முறையாம்
விக்ரமின் 'ஐ' படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் '2.0'. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனையடுத்து இயக்குநர் ஷங்கர், 'இந்தியன்' படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

1996-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். பார்ட்-1 சூப்பர் ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக உள்ளது. இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகிறதாம்.

ஷூட்டிங்கை இந்தாண்டு (2018) ஆகஸ்ட் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனம் எழுதி வருகிறார்கள். தற்போது, படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை எழுத பாடலாசிரியர் தாமரை கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் படத்திற்கு தாமரை பாடல் எழுதுவது இதுவே முதன்முறையாம்.
 

    தொடர்புடைய விடியோ

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்