முகப்புகோலிவுட்

"சிம்டாங்காரன் என்றால் என்ன?" - விஜய் ரசிகர்களுக்கு பாடலாசிரியர் விவேக் சொன்ன விளக்கம்

  | September 24, 2018 16:14 IST
Sarkar

துனுக்குகள்

  • விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம் `சர்கார்'
  • இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகவிருக்கிறது
  • தீபாவளி வெளியீடாக வர இருக்கிறது இப்படம்
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் `சர்கார்'. துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகவுள்ளது.

`சிம்டாங்காரன்' என்கிற அந்தப் பாடல்தான் இன்று வெளியாகவுள்ளது. மெர்சல் படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் - விவேக் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதியுள்ள விவேக் சிம்டாங்காரன் என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
 
சிம்டாங்காரன் என்கிற சென்னைத் தமிழ் வார்த்தைக்கு, கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன் (Attractive Young Man - Charismatic / Fearless / Audacious) ‬என்று அர்த்தமாம். "‪‪கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் #சிம்டாங்காரன்‬" எனக் கூறியிருக்கிறார் பாடலாசிரியர் விவேக். இன்று ஐந்து மணிக்கு இப்பாடல் வெளியாகவிருக்கிறது. தீபாவளி வெளியீடாக வர இருக்கிறது `சர்கார்'.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்