விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘மாச்சோ’ பாடல் வரிகளின் ஐடியா குறித்து விவேக்கின் டிவிட்

  | September 06, 2017 11:22 IST
Macho Song

துனுக்குகள்

  • இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடவுள்ளனர்
  • ‘மாச்சோ’ பாடல் வரிகள் வீடியோவை வெளியிட்டுள்ளனர்
  • பாடலாசிரியர் விவேக் ஸ்டைலிஷான வரிகள் எழுதியுள்ளார்
‘தெறி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் காம்போவில் பரபரப்பாக ரெடியாகி வரும் படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61-வது படமான இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடிக்கிறார். ‘தளபதி’க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3 நாயகிகளாம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனராம். அட்லியுடன் இணைந்து ‘பாகுபலி’ பட புகழ் கே.வி.விஜயேந்திர பிரசாத் & ‘விஜய் டிவி’ ரமண கிரிவாசன் திரைக்கதை எழுதியுள்ளனராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதன் பாடல்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. தற்போது, படத்தில் இடம்பெறும் ‘மாச்சோ’ பாடல் வரிகள் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆங்கிலத்தை தமிழ் மாதிரி பேசும் நியூ ஸ்டைலிஷான இப்பாடல் வரிகளின் ஐடியா குறித்து இதனை எழுதிய பாடலாசிரியர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
அவ தொட்டுட்டா=Touchittaa (Ava Touch pannittaana)
பாக்க Juicy=looka juicy
அவ பேசிட்டா=Speakitaa
கட்டிக்கிட்டேன்=huggitten
தூங்கி=sleepy
Photoஎடுத்தா=clicka
யோசிச்சுpaathen=thinky paathen
Whistleஅடிக்குதடி=விசிலுதடி
மின்னி=shiny
ருசிச்சு=tasty
சிரிச்சு=smily
Love pannitten =lovitten
துள்ளி=hoppy
முத்தமிட=kissa
நுகரும்=smellum
நீ எடுத்துட்டா=takeitta
Miss panniten=Missitten
Tweet pandren=Tweeturen
Treat pandren=Treaturen

படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யவுள்ளனர். வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் & டிரையிலர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்