விளம்பரம்
முகப்புகோலிவுட்

மெர்சலுக்காக எழுதிய மேஜிக்கல் பாடல்

  | October 06, 2017 14:43 IST
Lyricist Vivek

துனுக்குகள்

  • விஜய் முதன்முறையாக 3 வேடங்களில் நடித்துள்ளார்
  • இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்
  • இதன் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது
‘தெறி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் காம்போவில் பரபரப்பாக ரெடியாகி வரும் படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61-வது படமான இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய் கிராமத்து தலைவர், டாக்டர், மேஜிஷியன் என ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்துள்ளார் ர். ‘தளபதி’க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3 நாயகிகளாம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், வெளியான இதன் பாடல்களும், டீஸரும் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.
 
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, படத்தில் மேஜிஷியனாக வலம் வரவுள்ள விஜய் கேரக்டருக்கென ஒரு ஸ்பெஷல் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை விவேக்கே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். ‘மெர்சல்’ஐ வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்