விளம்பரம்
முகப்புகோலிவுட்

மிஸ்ட்ரி த்ரில்லரான ‘மாயவன்’ டிரையிலர்

  | August 10, 2017 10:43 IST
Maayavan Trailer

துனுக்குகள்

  • தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக களமிறங்கும் படம்
  • நலன் குமாரசாமி இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் & பாடல்கள் செம லைக்ஸ் குவித்தது
சின்ன பட்ஜெட்டில் தரமான கதைக்களம் கொண்ட ‘அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை’ போன்ற பல படங்களை கோலிவுட்டில் தயாரித்து தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்திற்கென ஒரு ஹிட் ஃபார்முலா வைத்திருப்பவர் சி.வி.குமார். இவர் தற்போது இயக்குநர் சீட்டில் அமர்ந்துள்ள படம் ‘மாயவன்’. சி.வி.குமாரே கதை எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘சூதுகவ்வும்’ இயக்குநர் நலன் குமாரசாமி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

ஹீரோவாக ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். சந்தீப்புக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். இதில் சந்தீப் போலீஸ் அதிகாரியாக வலம் வரவுள்ளார். மேலும், ஜாக்கி சேராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இதற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், லியோ ஜான் பால் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், டீஸர் மற்றும் ஃபேஸ்புக்கில் லைவ்வாக வெளியிடப்பட்ட பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தின் டிரையிலரை சி.வி.குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ‘ப்ராஜெக்ட் இசட்’ என்ற பெயரில் வருகிற செப்டெம்பர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்