முகப்புகோலிவுட்

நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்க்கி

  | July 11, 2018 11:59 IST
Kayamkulam Kochunni

துனுக்குகள்

  • காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுகிறது
  • இதன் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • படத்தை ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
கேரளாவில் புகழ் பெற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு மலையாளத் திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என டைட்டிலிட்டுள்ள இதில் ஹீரோவாக ‘ப்ரேமம்’ புகழ் நிவின் பாலி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், இதிக்கரா பக்கி என்ற கதாபாத்திரத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் நடித்துள்ளார்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் இதனை ‘ஸ்ரீ கோகுலம் மூவீஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கோபி சுந்தர் இசையமைத்து வரும் இதற்கு பினோத் பிரதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை தமிழில் டப் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் வெர்ஷனுக்கு வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறாராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்