விளம்பரம்
முகப்புகோலிவுட்

சமூக வலைதளங்களில் ‘எச்சரிக்கை’ விடப்போகும் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி

  | September 13, 2017 15:43 IST
Madhavan

துனுக்குகள்

  • ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ பேனர் சில மால்களில் தென்பட்டது
  • ஃபர்ஸ்ட் லுக்கை ஏ.ஆர்.முருகதாஸ், மணிரத்னம், பாலா வெளியிட்டனர்
  • இப்படத்தின் திரைக்கதை ஒரு புதிய கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம்
சமீபத்தில் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற டைட்டிலுடன் ஒரு பேனர் சில மால்களில் தென்பட்டது. இது எதற்காக என்று ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷனை கிளப்பி விட்டதற்கு பதிலாக இதன் 3 வித்தியாசமான போஸ்டர்ஸை சமீபத்தில் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், மணிரத்னம், பாலா வெளியிட்டனர். இப்போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்ததோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.

‘எச்சரிக்கை’ என தலைப்பிட்டுள்ள இதில் கதையின் முக்கிய வேடங்களில் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், கிஷோர், விவேக் ராஜ்கோபால் ஆகியோர் நடித்துள்ளனராம். இப்படத்தை அறிமுக இயக்குநர் சர்ஜூன்.கே.எம். என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். சஸ்பென்ஸ் டிராமாவாக உருவாகி வரும் இப்படத்தின் திரைக்கதை ஒரு புதிய கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம்.

‘8 தோட்டாக்கள்’ புகழ் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வரும் இதற்கு சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை சி.பி.கணேஷுடன் இணைந்து ‘டைம் லைன் சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, இதன் ஆடியோ ரைட்ஸை ‘டிரெண்டு மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் டிரையிலரை வருகிற செப்டெம்பர் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடிகர்கள் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து சமூக வலைதளங்களில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்