விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘மெர்சல்’ போனஸ் டிராக்கின் டைட்டில்

  | October 10, 2017 12:59 IST
Maayon Song

துனுக்குகள்

  • ‘மெர்சல்’ விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீஸாகவுள்ளது
  • இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்
  • மேஜிஷியன் கேரக்டருக்கு ‘மாயோன்’ எனத் தொடங்கும் ஸ்பெஷல் பாடல்
‘தெறி’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் கூட்டணியில் ரெடியாகியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61-வது படமான இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் கிராமத்து தலைவர், டாக்டர், மேஜிஷியன் என 3 வேடங்களில் நடித்துள்ளார். விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 ஹீரோயின்ஸாம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா செம ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் நடித்துள்ளாராம். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே, வெளியான இதன் 4 பாடல்கள், டீஸர் மற்றும் ப்ரோமோக்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.
 
சமீபத்தில், படத்தில் மேஜிஷியனாக வலம் வரவுள்ள விஜய் கேரக்டருக்கென ஒரு போனஸ் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதினார். தற்போது, இப்பாடலின் டைட்டில் ‘மாயோன்’ என்று விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, “தடையின் தடயம் உடைய உருக.. அழிக்க நெனச்சா, ரெண்டா வருவானே” என்று பாடலில் இடம்பெறும் சில வரிகளையும் பதிவிட்டுள்ளார். படத்தை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்