முகப்புகோலிவுட்

மணிரத்னம் படத்தில் இணையும் மலையாள நடிகர்

  | February 19, 2018 17:10 IST
Director Mani Ratnam Films

துனுக்குகள்

  • `காற்று வெளியிடை'க்கு பிறகு மணிரத்னம் இயக்கும் `செக்கச்சிவந்த வானம்'
  • நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்
  • இப்போது இந்தப் படத்தில் புதிதாக ஒரு மலையாள நடிகர் இணைந்திருக்கிறார்
`காற்று வெளியிடை' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் `செக்கச்சிவந்த வானம்'. இதில் பிரகாஷ்ராஜ், அரவிந்த் சுவாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், எனப் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்துவருகிறது. சில தினங்களுக்கு முன் இப்படத்தில் மும்பையைச் சேர்ந்த மாடலான டயானா எரப்பா இதில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. தற்போது இதில் ஒரு மலையாள நடிகர் இணையவிருக்கிறார். விமர்சக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற படம் `அங்கமாலி டைரீஸ்'. இதில் அப்பனி ரவி என்கிற முக்கிய பாத்திரத்தில் நடித்த சரத் குமார்தான் மணிரத்னம் படத்தின் புதிய அடிஷன். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடுத்த மாதம் முதல் படமாக்கப்பட இருக்கிறதாம். மேலும் சரத் `சண்டக்கோழி 2'விலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிராராம்.

முன்பு `செக்கச்சிவந்த வானம்' படத்தில் ஃபகத் பாசில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பின்பு சில காரணங்களால் ஃபகத் இப்படத்திலிருந்து விலகிக் கொண்டார். அவரின் பாத்திரத்தில்தான் சரத் நடிக்கிறாரா, இன்னும் படத்தில் யார் யார் இணைவிருக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்