முகப்புகோலிவுட்

ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்கிறாரா மம்மூட்டி?

  | September 10, 2018 11:37 IST
Thani Oruvan 2

துனுக்குகள்

  • ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’ தமிழில் மெகா ஹிட்டானது
  • இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்ஸாம்
  • பார்ட் 1-யில் மிரட்டலான வில்லன் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார்
2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. மோகன் ராஜா இயக்கியிருந்த இப்படம் கோலிவுட்டில் மெகா ஹிட்டானது. இதில் சித்தார்த் அபிமன்யு எனும் மிரட்டலான வில்லன் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடியிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பதாக மோகன் ராஜா ட்வீட்டரில் அறிவித்தார். இதிலும் ஹீரோவாக ஜெயம் ரவியே நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டபுள் ஹீரோயின்ஸாம்.

பார்ட் 1-யில் நடித்த நயன்தாராவும், ‘வனமகன்’ புகழ் சயிஷாவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது. தற்போது, இந்த படத்தில் வில்லனாக நடிக்க ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்