முகப்புகோலிவுட்

பேரன்பை பேசும் “பேரன்பு” டிரைலெர்

  | January 08, 2019 08:36 IST
Peranbu Movie

துனுக்குகள்

  • வரும் பிப்ரவரி மாதம் இந்த படம் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
  • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்
  • மம்முட்டி இந்த படத்தில் நடித்திருக்கிறார்
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி இவை மூன்றும் இயக்குனர் ராமின் படைப்புகள். இவை அனைத்தும் சமூகத்தில் பெரும் கேள்விகளையும் வெவ்வேறான விமர்சனங்களையும் வாரி இறைத்தபடி திரையரங்குகளை நிரப்பியவை.
 
கற்றது தமிழ், திரைப்படம் வந்த போது யார் இந்த காட்டுமிராண்டி இப்படி படத்தை எடுத்திருக்கிறான். எனத்தொடங்கி இன்னும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.
 
நடிகர் ஜீவா, ஆனந்தி இந்த படத்தில் அவ்வளவு எளிமையாகவும் தத்ரூபமாகவும் நடித்திருந்தனர். அடுத்த சில காலம் இடைவெளிவிட்ட ராம் தங்க மீன்கள் திரைப்படத்தை இயக்கினார்.

தந்தைக்கும் மகளுக்குமான பாச பிணைப்பு இந்த படத்தில் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருந்தார். இயக்குனர் ராமே அப்பாவாக நடித்தது அந்த கதா பாத்திரத்திற்கு அவ்வளவு அம்சமாக பொருந்தியது.
 
“தரமணி”  பல விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்த படம் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
ஆண்டிற்கு ஒரு படமாவது எடுத்து பீல்டு அவுட் ஆகாமல் இருக்க வேண்டும் என தொடர்ந்து படம் இயக்கும் இயக்குனர்கள் மத்தியில் தன் பொருளாதார பிரச்னை ஒரு புறம் இருந்தாலும் ஆழமான கருத்துகளை மிக நேர்மையாக தன் படைப்புகள் மூலம் கொடுத்து வருகிறார் இயக்குனர் ராம்.
 

 
 ஆயிரம் படைப்புகள் இருந்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படைப்பு இந்த சமூகத்தில் பேச வைப்பதுதான் சிறந்த படைப்பு. காத்திருந்து தான் எடுக்கும் அத்தனை படைப்புகளையும் பேசு பொருளாக மாற்றும் ராமின் தந்திரம் வியப்பானவை.
 
அந்த அடிப்படையிலே ராமின் “பேரன்பு” படத்தையும் பார்க்க வேண்டி இருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி இந்த படத்தில் நடித்திருக்கிறார். கற்றது தமிழில் ராமின் நம்பிகையாக பிரதிபளித்த அஞ்சலி  இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையயமைக்க   பி.எல் தேனப்பன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.
 
இந்த படத்தின் டிரைலெர் வெளியாகி தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது. தங்க மீன்கள் படத்தை போலவே அப்பா,மகள் இருவருக்கும் உள்ள பேரன்பை வெளிப்படுத்தும் கதைகளமாக இருக்கும் என்று டிரைலெர் காட்சிகள் உறுதி படுத்துகின்றன.
“யாருக்கு ? என ஒரு பெண் கேள்வி கேட்கிறார். மகளுக்கு என மம்முட்டி சொல்ல பளார் என்று மம்முட்டியின் கன்னத்தில் அறைகிறார் அந்த பெண்” இந்த காட்சிகள் தங்க மீன்கள் படத்தை நினைவிற்கு கொண்டு வருகிறது.
 
“மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையாக இருக்கும் ஒரு பெண் சந்திக்கும் துயரமும், வேதனையும் அடுத்தடுத்த காட்சிகளில் ஏதோ ஒரு உணர்வை சீண்டி பார்க்கிறார் இயக்குனர் ராம்.
 
“என் வாழ்கையில் நடந்த சில விஷயங்களை தேர்தெடுத்து இந்த கதையை நான் எழுதுகிறேன். நீங்க எவ்வளவு நல்ல ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் புரிந்துக்கொள்ள நான் இதை எழுதுகிறேன்” என்று மம்முட்டியின் வசனத்தோடு திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்கிற அறிவிப்போடும் டிரைலெர் முடிகிறது.
 
இதை பார்க்கும் போது ராம் புத்தக வாசிப்பு பிரியர் என்பது அறிந்த விஷயமே இந்த படமும் அவர் வாசிப்பிலிருந்து வந்ததாக இருக்கலாம் அல்லது அவருடைய அனுபவத்தில் சந்தித்த ஒருவரின் வாழ்க்கையை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டதாகவும் இருக்கலாம். எதுவாயினும் அவருடைய படைப்பு நேர்மையானதாக இருக்கும் என்கிற நம்பிக்கையை மீண்டும் விதைத்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்