முகப்புகோலிவுட்

மணிரத்னத்தின் 'செக்கச்சிவந்த வானம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  | August 10, 2018 19:48 IST
Chekka Chivantha Vaanam

துனுக்குகள்

  • இதில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறதாம்
  • ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா’ நிறுவனம் தயாரிக்கிறது
  • ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்
கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா,தியாகராஜன், ஜெயசுதா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறதாம்.

விஜய் சேதுபதி போலீஸாக வலம் வரவுள்ளார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.


தற்போது, படத்தை செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்