முகப்புகோலிவுட்

மணிரத்னம் படத்தின் தலைப்பு அறிவிப்பு

  | February 09, 2018 17:39 IST
Mani Ratnam Next Film

துனுக்குகள்

  • இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • ‘மெட்ராஸ் டாக்கீஸ்’, ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ இணைந்து தயாரிக்கவுள்ளதாம்
  • படத்திற்கு ‘செக்கச்சிவந்த வானம்’ என டைட்டில் சூட்டியுள்ளனர்
கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளதாம்.

விஜய் சேதுபதி போலீஸாக வலம் வரவுள்ளாராம். தற்போது, படத்திற்கு ‘செக்கச்சிவந்த வானம்’ என டைட்டில் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.  


இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். படத்தின் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்