விளம்பரம்
முகப்புகோலிவுட்

மனிதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் - உதயநிதி கலகல பேட்டி

  | May 08, 2017 16:06 IST
Movies

துனுக்குகள்

  • எனக்கு நடிப்பு ஆர்வத்தை தூண்டியவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
  • மனிதன் திரைப்படம் என்னை ஒரு நடிகனாக மக்கள் ஏற்றுக்கொள்ள வைத்தது
  • எழில் போன்ற மிகவும் கூலான இயக்குநரை நான் பார்த்தது இல்லை
தயாரிப்பாளர்களில் இருந்து தமிழ் திரையுலகிற்கு நடிக்க வந்தவர்கள் பலர் அதில் வெற்றிக்கண்டவர்கள் வெகு சிலரே அதில் ஒருவர் தான் உதயநிதி ஸ்டாலின், மிகப்பெரிய அரசியல் மற்றும் திரைத்துறை பின்புலம் இவருக்கு இருந்தாலும், அந்த கர்வம் துளியும் கூட அவரிடம் இருக்காது என்று பலர் கூறி இருந்தாலும், அவையெல்லாம் உண்மைதான் என்று மெய்ப்பிக்கும் வகையில் இருந்தது நாம் அவரிடம் பேட்டி கண்டபோது...

சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தின் வெளியீட்டில் மும்முரமாக இருந்த அவரை நமது பேட்டிக்காக அணுகிய போது வழக்கமான சிரிப்போடு நம்மை வரவேற்றார், கொஞ்சம் கூட தாமதிக்காமல் சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தில் தனக்கு கிடைத்த அனுபவத்தை பற்றி விவரிக்க நாம் இடைமறித்து நம் கேள்வியை தொடுத்தோம் உங்களுடைய படங்கள் நிறைய வெளியேவந்து விட்டது, ஆனாலும் இப்போ இந்த கேள்வியை கேட்டால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் தயாரிப்பிலிருந்து நடிக்க வந்த நிகழ்வு எவ்வாறு அமைந்தது? "நீங்கள் கேட்பது உண்மைதான் இப்போது அந்த கேள்வியை கேட்கலாம், எனக்கு முழு கவனமும் தயாரிப்பு பணிகளில் தான் இருந்தது, இளையதளபதி விஜய், சூர்யா என பல முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் தயாரித்துக்கொண்டிருந்தோம், 'ஆதவன்' படப்பிடிப்பின் போது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் என்னிடம் இறுதி காட்சியில் தன்னுடன் இனைந்து ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சொன்னார், முதலில் பயந்தேன் பின்பு ஒரு ஸீன் தானே என நினைத்து நடித்தேன், பிறகு ஒரு நம்பிக்கை கிடைக்க தற்போது 8 படங்களை நடித்து முடித்து விட்டேன் அதில் 5 வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது அடுத்தது இம்மாதம் வெளிவரும் இன்னும் இரண்டு திரைப்படம் விரைவில் வெளிவரும் என்று எண்ணுகிறேன்" என்று கூறினார்.

அடுத்ததாக கதை தேர்வு எவ்வாறு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு? "என்னுடைய படத்தின் கதைக்காக பெரிதாக திட்டமிடுவது இல்லை, எனக்கு ராஜேஷ் மிகவும் பிடித்த இயக்குநர், ஒரு முறை என்னிடம் சார் நீங்களும் சந்தானமும் நண்பர்கள் உங்களுடைய காதலியின் திருமணத்தை நிறுத்துவதற்காக பாண்டிச்சேரி செல்கிறீர்கள் இதான் கதையின் ஒன் லைன் உங்களுக்கு ஓகேவா என்று கேட்டார் எனக்கு மிகவும் பிடித்திருந்தது உடனே ஒப்புக்கொண்டேன், அப்படி எதார்த்தமாக நடைப்பெற்றது தான் ஓகே ஓகே திரைப்படம் அன்று முதல் இன்று வரை நடிப்பு பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது " என்று அவர் நிறுத்துகையில், ஏன் தொடர்ந்து நகைச்சுவை திரைப்படங்களாக நடித்துக்கொண்டு வருகிறீர்கள் என்ற நம்முடைய கேள்விக்கு "அப்படி இல்லை என்னுடைய 'கெத்து' திரைப்படம் திரில்லர் சப்ஜெக்ட், 'மனிதன்' திரைப்படம் வேறு மாதிரியான கதைக்களம், என்னை ஒரு நடிகனாக அங்கீகரித்த படம் என்று கூட சொல்லலாம், அனால் நீங்கள் குறிப்பிட்டது போல் அதிகமான என்னுடைய திரைப்படங்கள் நகைசுவையை மையப்படுத்தி அமைந்துள்ளது, அதற்கு காரணம் மக்களை சிரிக்க வைப்பது மிகவும் கடினமான ஒன்று அதனால் தான் அதை தேர்தெடுத்தேன்" என்று கூறினார்.
இயக்குநர் எழில் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்களேன், "ஹைய்யோ அவர் போன்ற மிகவும் கூலான இயக்குநரை நான் பார்த்ததே இல்லை, எப்போதுமே மானிட்டர் பின் அமர்ந்துக்கொண்டு இருப்பார் படப்பிடிப்பு தளமே கலவரமாக காட்சியளித்தலும் அவர் மட்டும் சிரிப்போடு அமர்ந்திருப்பார், எப்படி நடிக்க வேண்டும் என்று அத்தனையும் சொல்லிக்கொடுக்க மாட்டார், ஒரு முறை நண்பர் சூரியிடம், நானே சென்று என்ன சகோ ஒண்ணுமே சொல்லிக்கொடுக்க மாற்றுகிறாரே படம் நல்ல படிய வருமா என்று கேட்டேன் ஒன்னும் கவலைப்படாதீங்க படம் முடிஞ்சு ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துட்டு சொல்லுங்க என்று கூறினார், அவர் கூறியது உண்மை என்பது ஃபர்ஸ்ட் காப்பி பார்த்த பிறகு தான் தெரிந்தது, நம்முடைய இயல்பான அசைவுகளை திரையில் நடிப்பாக காட்டுவதில் மிகவும் கெட்டிக்காரர், படம் நல்ல படியாக வந்துள்ளது அனைவரும் தியேட்டரில் போய் பார்த்து விட்டு உங்களுடைய கருத்துகளை சொல்லுங்கள் பத்திரிக்கை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் படம் நல்ல இருந்தா அன்றே விமர்சனம் செய்யுங்கள் அப்படி இல்லையென்றால் மூன்று நாட்களுக்கு பிறகு விமர்சனம் எழுதுங்கள் இது என்னுடைய தாழ்மையான கருத்து".

மனிதன் போன்ற திரைப்படங்கள் எப்போது நடிப்பீர்கள் என்ற நம் கேள்விக்கு "மனிதன் போன்ற படங்கள் அல்ல மனிதன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமே திரைக்கு வர உள்ளது, அடுத்த வருடம் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளோம், விரைவில் திரையில் பார்ப்பீர்கள்" என்று கூறிவிட்டு வழக்கமான தன் சிரிப்புடன் விடைபெற்றார் உதயநிதி ஸ்டாலின்.

இயக்குநர் எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், சூரி, ரெஜினா கேசென்ட்ரா, சிருஷ்டி டாங்கே, மன்சூர் அலி கான், ரோபோ சங்கர், லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிப்பில் வரும் மே 12 "சரவணன் இருக்க பயமேன்" திரைப்படம் வெளியாகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்