முகப்புகோலிவுட்

தனுஷ் படத்தில் ஜோதிகாவுக்கு பதில் மஞ்சு வாரியர்?

  | September 12, 2018 13:18 IST
Dhanush

துனுக்குகள்

  • இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்
  • இதன் ஷூட்டிங்கை திருநெல்வேலியில் வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ளனர்
  • இதில் ஹீரோயினாக நடிக்க முதலில் ஜோதிகாவை தான் வெற்றிமாறன் அணுகினார்
சௌந்தர்யா ரஜினிகாந்தின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்கு பிறகு நடிகராக தனுஷ் கைவசம் கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’, பாலாஜி மோகனின் ‘மாரி 2’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இது தவிர தனுஷ் ஒரு பீரியட் படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

சமீபத்தில், தனுஷ் கால்ஷீட் டைரியில் 3 புதிய படங்கள் இணைந்தது. இம்மூன்று படங்களையுமே ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார். இந்த 3 படங்களையும் தமிழ் திரையுலகிலுள்ள முன்னணி இயக்குநர்கள் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இதில் ஒரு படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். இதன் ஷூட்டிங்கை திருநெல்வேலியில் வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ஜோதிகாவை தான் வெற்றிமாறன் அணுகினார். பின், ஷூட்டிங் அவுட்டோரில் நடைபெறவிருப்பதால் ஜோதிகா கால்ஷீட் கொடுக்கவில்லையாம். தற்போது, ஜோதிகாவுக்கு பதிலாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்