முகப்புகோலிவுட்

மெகா பட்ஜெட் சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் அர்னால்ட், ஜாக்கி சான் – ஷங்கரின் நெக்ஸ்ட் டார்கெட்

  | December 04, 2018 14:17 IST
Sankar Shanmugham

துனுக்குகள்

  • ‘2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • ‘இந்தியன் 2’வின் ஷூட்டிங்கை டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கவுள்ளனர்
  • ஷங்கரின் புதிய படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடியாம்
விக்ரமின் 'ஐ' படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘2.0'. ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து ‘உலக நாயகன்' கமல்ஹாசனின் ‘இந்தியன் 2' படத்தை எடுக்கவுள்ளார் ஷங்கர்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கவுள்ளனர். இந்நிலையில், ‘இந்தியன் 2'வுக்கு பிறகு ஷங்கர் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளது.

அதிக VFX காட்சிகள் கொண்ட இப்படத்தை ‘2.0' போல 3டி தொழில்நுட்பத்தில் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடியாம். இதில் அர்னால்ட் ஸ்வார்ஷ்நெகர், ஜாக்கி சானுடன் இணைந்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்