முகப்புகோலிவுட்

‘மெர்க்குரி’ படத்துக்காக பிரபு தேவா ஆடியன்ஸிடம் வைத்த ரெக்வஸ்ட்

  | April 16, 2018 12:08 IST
Mercury Movie Release Date

துனுக்குகள்

  • இதில் பிரபு தேவாவுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்
  • சைலண்ட் த்ரில்லராக தயாராகியுள்ள இப்படத்தில் வசனங்களே கிடையாதாம்
  • இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படம் ‘மெர்க்குரி’. இதில் முக்கிய வேடங்களில் சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவாவுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம். இப்படத்தில் வசனங்களே கிடையாதாம். சைலண்ட் த்ரில்லராக தயாரான இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை‘ஸ்டோண் பென்ச் ஃபிலிம்ஸ் – பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் காரணமாக தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸானது. இந்நிலையில், பிரபு தேவா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேரிட்டுள்ளார்.
 
அதில் அவர் கூறியதாவது “எல்லாருக்கும் வணக்கம். ஏப்ரல் 13-ஆம் தேதி ‘மெர்க்குரி’ உலகமெங்கும் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஸ்ட்ரைக் நடப்பதால் இப்படம் இங்கு வெளியாகவில்லை. வெகு விரைவில் தமிழகத்திலும் ரிலீஸாகும். அதுவரை, நீங்கள் திருட்டு VCD-யில் இந்த படத்தை பார்க்க வேண்டாம். ரிலீஸானதும் தியேட்டருக்கு வந்து பார்க்கணும்னு வேண்டுகிறேன்” என்று பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்