முகப்புகோலிவுட்

Bucheon சர்வதேச திரைப்பட விழாவில் ‘மெர்சல்’

  | April 18, 2018 11:19 IST
Thalapathy Vijay

துனுக்குகள்

  • ‘மெர்சல்’ கோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
  • இதில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்திருந்தார்
  • இவ்விழா ஜூலை 12 முதல் துவங்கி ஜூலை 22 வரை நடக்கவுள்ளதாம்
‘தெறி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் காம்போவில் கடந்த ஆண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் ‘மெர்சல்’. இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இதில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்திருந்தார். ‘தளபதி’க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3 ஹீரோயின்ஸாம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அட்லியுடன் இணைந்து ‘பாகுபலி’ பட புகழ் கே.வி.விஜயேந்திர பிரசாத் & ‘விஜய் டிவி’ ரமண கிரிவாசன் திரைக்கதை எழுதியிருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றது.
 
தற்போது, தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் 22-வது Bucheon சர்வதேச ஃபென்டாஸ்டிக் திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விழா வருகிற ஜூலை 12-ஆம் தேதி முதல் துவங்கி ஜூலை 22-ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாம். இதை ‘தேனாண்டாள்’ நிறுவனமே தங்களது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்