விளம்பரம்
முகப்புகோலிவுட்

அடுத்த கட்டத்திற்கு சென்ற ‘தளபதி’யின் ‘மெர்சல்’

  | September 15, 2017 17:30 IST
Mersal

துனுக்குகள்

  • விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடிக்கிறார்
  • இப்படத்தின் பேட்ச் வொர்க் ஷூட் நடைபெற்று வருகிறது
  • அட்லியின் பிறந்த நாளன்று டீஸர் வெளியாகுமென கூறப்படுகிறது
‘தெறி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் காம்போவில் பரபரப்பாக ரெடியாகி வரும் படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61-வது படமான இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடிக்கிறார். ‘தளபதி’க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3 நாயகிகளாம். இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனராம். அட்லியுடன் இணைந்து ‘பாகுபலி’ பட புகழ் கே.வி.விஜயேந்திர பிரசாத் & ‘விஜய் டிவி’ ரமண கிரிவாசன் திரைக்கதை எழுதியுள்ளனராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதன் பாடல்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. தற்போது, படத்தின் பேட்ச் வொர்க் ஷூட் நடக்கிறது. ஏற்கெனவே, தொடங்கிய படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் பின்னணி இசையமைக்கும் பணியை ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (செப்டெம்பர் 15-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தேனாண்டாள் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் அதிதி ரவீந்தரநாத்தே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். இயக்குநர் அட்லியின் பிறந்த நாளான செப்டெம்பர் 21-ஆம் தேதி படத்தின் டீஸர் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யவுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்