விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘மெர்சல்’ படத்திற்கு டீல் பேசிய பிரபல நிறுவனங்கள்

  | September 04, 2017 11:59 IST
Vijay Mersal

துனுக்குகள்

  • ‘மெர்சல்’ ‘தளபதி’ விஜய்யின் 61-வது படமாம்
  • அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் 2-வது படம்
  • இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது
‘தெறி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் காம்போவில் பரபரப்பாக ரெடியாகி வரும் படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61-வது படமான இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடிக்கிறார். ‘தளபதி’க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3 நாயகிகளாம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனராம். அட்லியுடன் இணைந்து ‘பாகுபலி’ பட புகழ் கே.வி.விஜயேந்திர பிரசாத் & ‘விஜய் டிவி’ ரமண கிரிவாசன் திரைக்கதை எழுதியுள்ளனராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதன் பாடல்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. தற்போது, படத்தின் அமெரிக்கா (USA) வெளியீட்டு உரிமையை ‘ATMUS எண்டர்டெயின்மெண்ட் – US தமிழ் LLC’ நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யவுள்ளனர். வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் & டிரையிலர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்