விளம்பரம்
முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியை அடுத்து விஜய்

  | October 12, 2017 15:48 IST
Vijay Mersal

துனுக்குகள்

  • விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது ‘மெர்சல்’
  • விஜய் சேதுபதி – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘ONNPS’
  • இதன் வெளிநாட்டு உரிமை அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது
‘தெறி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய்யின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. இதில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்துள்ளார். விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 நாயகிகளாம். இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஸ்டைலிஷான வில்லன் கதாபாத்திரமாம். மேலும், சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன், கோவை சரளா ஆகியோர் முக்கய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஏற்கெனவே, வெளியிடப்பட்ட இதன் பாடல்கள், டீஸர் மற்றும் ப்ரோமோக்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து டிரெண்டானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது.
 
தற்போது, படத்தின் வெளிநாட்டு உரிமையை ‘AP இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் – ஹோம் ஸ்க்ரீன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தேனாண்டாள் நிறுவனமே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. சமீபத்தில், இந்நிறுவனங்கள் (API & ஹோம் ஸ்க்ரீன்) விஜய் சேதுபதி – கெளதம் கார்த்திக் காம்போவில் தயாராகி வரும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் வெளிநாட்டு ரைட்ஸை வாங்கியது குறிப்பிடத்தக்கது. ‘மெர்சல்’-ஐ விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்