விளம்பரம்
முகப்புகோலிவுட்

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான வசனகர்த்தா காலமானார்

  | September 13, 2017 18:26 IST
Shanmugham

துனுக்குகள்

 • எம்.ஜி.ஆர். படங்களின் ஆஸ்தான கதை, வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம்
 • இயக்குநர் பி.ஆர்.பந்தலுவிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்
 • 87 வயதான சண்முகம் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்
நடிகர் எம்.ஜி.ஆர். படங்களின் ஆஸ்தான கதை, வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம். 87 வயதான சண்முகம் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவர் இயக்குநர் பி.ஆர்.பந்தலுவிடம் உதவி இயக்குநராக சிவாஜி நடித்த ‘கர்ணன் மற்றும் கப்பலோட்டிய தமிழன்’ போன்ற படங்களில் பணியாற்றினார்.

பின்பு, ‘ஆயிரத்தில் ஒருவன், ஊருக்கு உழைப்பவன், முகராசி, சிரித்து வாழ வேண்டும், ரகசிய போலீஸ் 115’ உள்ளிட்ட பல எம்.ஜி.ஆர். படங்களுக்கு கதை – வசனம் எழுதியுள்ளார் ஆர்.கே.சண்முகம். இவரின் மறைவுக்கு

திரையுலகத்தினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்