முகப்புகோலிவுட்

`விசுவாசம்' படத்துக்கு இசையமைக்கும் இமான்

  | February 14, 2018 18:17 IST
Viswasam Cast

துனுக்குகள்

  • அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணையும் படம் `விசுவாசம்'
  • இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்
  • படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது
'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக அஜித் சிவா இணையும் படம் `விசுவாசம்'. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன் இப்படத்துக்கு இசையமைப்பது இமான் என சொல்லப்பட்டு வந்தது. தற்போது இமான் அஜித் கூட்டணி உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இமான் தனது முகநூல் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். சமீபத்தில் வெளியான `டிக் டிக் டிக்' ஆல்பத்துடன் சென்சுரி அடித்த இமான், இப்போது அஜித்துடன் முதல் முறையாக இணைந்திருக்கிறார்.
 
சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் இப்படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்