முகப்புகோலிவுட்

மீண்டும் இணைந்த ‘புரியாத புதிர்’ கூட்டணி

  | April 24, 2018 11:31 IST
Ranjit Jeyakodi

துனுக்குகள்

  • ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி
  • பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹரிஷுக்கு ரசிகர்கள் அதிகமாகியுள்ளது
  • ஸ்ட்ரைக்குக்கு முன்பு இப்படத்தின் ஷூட்டிங் 6 நாட்கள் நடைபெற்றதாம்
கடந்த ஆண்டு (2017) வெளியான ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இதில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக காயத்ரி டூயட் பாடி ஆடியிருந்தார்.

இதனையடுத்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் படத்தில் கதையின் நாயகனாக ‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது. ஏற்கெனவே, ஸ்ட்ரைக்குக்கு முன்பு இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் 6 நாட்கள் நடைபெற்றதாம்.
 

‘மாதவ் மீடியா’ நிறுவனம் தயாரிக்கும் இதன் அடுத்த ஷெடியூல் விரைவில் துவங்கவுள்ளது. தற்போது, இப்படத்திற்கு இசையமைக்க சாம்.சி.எஸ் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘புரியாத புதிர்’ படத்திற்கு இசையமைத்தது சாம்.சி.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்