விளம்பரம்
முகப்புகோலிவுட்

பாலிவுட்டிற்குள் என்ட்ரியாகும் பிரபல இசையமைப்பாளர்

  | May 16, 2017 15:02 IST
Movies

துனுக்குகள்

  • ‘சிந்தனை செய்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்
  • தமிழ் மற்றும் தெலுங்கில் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளராக வலம் வருகிறார்
  • இப்படத்தின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது
ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் எஸ்.தமன். பின், ‘சிந்தனை செய்’ படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கி தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளராக வெற்றி வாகை சூடி வலம் வருகிறார். ‘ஈரம், கிக், பிருந்தாவனம், காஞ்சனா, பிசினஸ்மேன், நாயக், அழகு ராஜா’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், முதன்முறையாக ஒரு பாலிவுட் படத்திற்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார் தமன்.

‘கோல்மால் அகைன்’ என டைட்டிலிட்டுள்ள இதனை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இதனை தமனே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். ரோஹித் ஷெட்டி இயக்கிய இதன் முந்தைய பாகங்களான ‘கோல்மால், கோல்மால் ரிடர்ன்ஸ், கோல்மால் 3’ ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் ஹிட்டானது. ஆகையால், இந்த படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது.

இதில் அஜய் தேவ்கன், அர்ஷத் வார்ஸி, தபு, குணால் ஹேமு, துஷார் கபூர், பர்னீதி சோப்ரா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஜோமோன்.டி.ஜான் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் ‘ரோஹித் ஷெட்டி பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து அஜய் தேவ்கன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அஜய் தேவ்கன் பிலிம்ஸ்’ மூலம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். படத்தை இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாம் ‘கோல்மால் அகைன்’ டீம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்