முகப்புகோலிவுட்

"2.0வுக்காக ஒரு லட்சம் டம்மி போன்கள் உருவாக்கினோம்!" - கலை இயக்குநர் முத்துராஜ்

  | November 22, 2018 16:25 IST
Rajini

துனுக்குகள்

  • ஷங்கர் இயக்கியிருக்கும் படம் 2.0
  • ரஜினி, அக்‌ஷய், எமி ஜாக்சன் நடித்துள்ளனர்
  • நவம்பர் 29ம் தேதி படம் வெளியாகிறது
சிவாஜி, எந்திரன் படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கியிருக்கும் படம் 2.0. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கிறது இப்படம். அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் எமி ஜாக்ஸன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு கலை இயக்குநராக டி.முத்துராஜ் பணியாற்றியிருக்கிறார். இப்படத்தைப் பற்றி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் "இந்தப் படத்திற்காக ஒரு லட்சம் டம்மி மொபைல் போன்களை உருவாக்கினோம். ரஜினி சார் ஒவ்வொரு செட்டையும் வந்து பார்ப்பார். லேக் பக்கத்தில் ஒரு கார்டன் செட் ஒண்ணு உருவாக்கினோம். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு `பயங்கரமா பண்றீங்க சார். அதனாலதான் உங்கள ஷங்கர் சார் விடமாட்றார்'னு சொல்லி பாராட்டினார்.

இந்தப் படத்திற்கு நிறைய வி.எஃப்.எக்ஸ் தேவைப்பட்டதால 95 சதவீதம் செட் உள்ளதான் ஷூட் பண்ணினோம். 5 சதவீதம்தான் லைவ் லொக்கேஷனே. ரஹ்மான் சாருடைய ஒய்.எம் ஸ்டிடியோஸ்ல ஒரு பாட்டு ஷூட் பண்ணினோம். அதில் ரோபோ பூக்கள் அசையும் படியா, ரோபோ பூச்சிகள் பறக்கும்படியானு ஒரு பாடலுக்கே அவ்வளவு மெனக்கெடலோட வேலை பண்ணோம். அப்போ மொத்தப் படமும் எவ்வளவு கடினமா உழைச்சிருப்போம். கண்டிப்பா 2.0 ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமா இருக்கும்" எனக் கூறினார். இப்படம் நவம்பர் 29ம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்