முகப்புகோலிவுட்

"என்னுடைய காட்சிகளே திருடப்பட்டிருக்கிறது" - கே.பாக்யராஜ்

  | November 02, 2018 15:52 IST
K. Bhagyaraj

துனுக்குகள்

  • தமிழின் முக்கிய இயக்குநர் கே.பாக்யராஜ்
  • `சர்கார்' கதை சர்ச்சையை தீர்த்து வைத்திருக்கிறார்
  • எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை இன்று கே.பாக்யராஜ் ராஜினாமா செய்த செய்தி பரபரப்பாகி வருகிறது. சங்கத்தில் நடக்கும் சில ஒழுங்கில்லாத செயல்கள் பிடிக்காமல் விலகுவதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் விஜய்யின் `சர்கார்' பட கதை சர்ச்சையில் நீதிமன்றம் வரை சென்றதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் `உங்களுடைய கதையோ, காட்சிகளோ திருடுபோன சம்பவங்கள் நடந்திருக்கிறதா?' எனக் கேட்கப்பட்டது.

" `கண்ணா லட்டு தின்ன ஆசையா' விவகாரம் ஊருக்கே தெரியும். அதற்கு முன்னால என்னுடைய கதை விவாதங்கள் நடக்கும் போது சில காட்சிகள் சொல்வேன். அங்கிருக்கும் யாராவது அதைப் பற்றி வெளியே சொல்லி அதைக் காசாக்கிக் கொள்கிறார்கள். `அன்பு' படத்தில் நடக்கும் அந்த எலெக்ஷன் காமெடியும், `மிடில் கிளாஸ் மாதவன்' படத்தில் ஆறு மணிக்கு மேல் வடிவேலு குடித்துவிட்டு பண்ணும் கலாட்டாவும் நான் அப்படியான விவாதங்களில் சொல்லிய காட்சிகள்தான். படம் வந்து மிகத் தாமதமாகத் தான் இப்படி நடந்திருப்பதே தெரியும், பின்பு யாரிடம் பேசி என்ன செய்வது என நொந்துகொள்வேன்" என்றார் பாக்யராஜ்
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்