முகப்புகோலிவுட்

மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ ரிலீஸ் ப்ளான்

  | January 11, 2018 10:12 IST
Savarakkathi Movie

துனுக்குகள்

  • ஆதித்யா, மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்
  • இப்படத்திற்கு மிஷ்கினே கதை-திரைக்கதை-வசனம் எழுதி, தயாரித்துள்ளார்
  • இதற்கு சென்சார் குழு கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது
அறிமுக இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சவரக்கத்தி’. இவர் இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இதில் கதையின் மிக முக்கிய வேடங்களில் இயக்குநர்கள் ராம் – மிஷ்கின், நடிகை பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மிஷ்கினே கதை-திரைக்கதை-வசனம் எழுதி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘LONE WOLF புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

அரோல் கொரேலி இசையமைத்துள்ள இதற்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூலியன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட போஸ்டர்ஸ், 2 டீஸர்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தங்கக்கத்தி எனும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.


சமீபத்தில், படத்தின் வெளியீட்டு உரிமையை ‘KRIKES சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தை வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் ஆதித்யாவே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புதிய போஸ்டரை ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்