விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘செர்லாக் ஹோம்ஸ்’ ஸ்டைலில் ‘துப்பறிவாளன்’

  | May 19, 2017 22:03 IST
Director Mysskin Next Film

துனுக்குகள்

  • விஷால் கைவசம் 6 படங்கள் உள்ளது
  • கோலிவுட்டில் துப்பறியும் படங்கள் அதிகம் வருவது இல்லை
  • இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் செம வைரலானது
‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு விஷால் நடித்த சுந்தர்.சியின் ‘மதகஜராஜா’ சில வருடங்களாகவே வெளியீட்டிற்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, விஷால் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ ஆகிய 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர கைவசம் லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, பிரபு தேவாவின் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’, அறிமுக இயக்குநர் வெங்கடேஷின் ‘நாளை நமதே’ உள்ளது.

இதில் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ்வாக வலம் வரவுள்ளார். மேலும், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் குறித்து மிஷ்கின் கூறுகையில், ஆங்கிலத்தில் வந்த ‘செர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளியான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற நாவல்களின் ஸ்டைலில் ‘துப்பறிவாளன்’ படம் இருக்கும். கோலிவுட்டில் இது போன்ற துப்பறியும் படங்கள் அதிகம் வருவது இல்லை. இந்த படத்தில் அறிவுப்பூர்வமான துப்பறியும் காட்சிகளும், பரபரப்பான சண்டைக் காட்சிகளும், அதோடு ஒரு மெல்லிய காதலும் உள்ளது. இன்னும் 10 நாட்களின் ஷூட்டிங் மட்டுமே பேலன்ஸ் என மிஷ்கின் கூறியுள்ளார்.

அரோல் கொரேலி இசையமைத்து வரும் இதற்கு கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ எஸ்.நந்தகோபாலுடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். சமீபத்தில் படக்குழுவால் ட்விட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. படத்தை வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது ‘துப்பறிவாளன்’ டீம். வெகு விரைவில் டீசர், டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்