விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘நடிகையர் திலகம்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

  | October 06, 2017 13:26 IST
Nag Ashwin

துனுக்குகள்

  • 1950,60-களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சாவித்ரி
  • இதில் ‘சாவித்ரி’யின் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்
  • துல்கர் சல்மான் ‘காதல் மன்னன்’ வேடத்தில் வலம் வரவுள்ளார்
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாரை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் கோலிவுட்டிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் டோலிவுட்டிலும் நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். சாவித்ரி 1950, 60-களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்து பல அற்புதமான படங்களில் நடித்துள்ளார். ஆகையால், ரசிகர்களுக்கு படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது.

இதில் சாவித்ரியின் கேரக்டரில் கீர்த்தி சுரேஷும், ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். சமந்தா ரிப்போர்டராக வலம் வரவுள்ளாராம். அவருக்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். ஷாலினி பாண்டேவுக்கு சாவித்ரியின் தோழி ஜமுனா கதாபாத்திரமாம். ‘வைஜெயந்தி மூவீஸ் - ஸ்வப்ன சினிமா’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

மிக்கி.ஜே.மேயர் இசையமைத்து வரும் இதற்கு டேனி சஞ்செஸ்-லோபெஸ் (DANI SANCHEZ-LOPEZ) என்பவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் வெளிநாட்டு உரிமையை ‘NIRVANA சினிமாஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்